Posts
Showing posts from August, 2020
கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்: எந்த முறையில் நடத்துவது
- Get link
- Other Apps
கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்: எந்த முறையில் நடத்துவது? என்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது: அமைச்சர் கே.பி. அன்பழகன் பேட்டி..!! சென்னை: தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். இறுதி செமஸ்டர் தேர்வு யுஜிசி வழிக்காட்டுதல்படி கண்டிப்பாக நடத்தப்படும், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் - மே மாதம் அறிவிக்கப்பட்ட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. மேலும், தேர்வு தேதிகள் ஊரடங்கு விலக்கப்பட்டப்பிறகு தெரிவிக்கப்படும் என்று கூறியது. இதற்கிடையில், தமிழக அரசு, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் அரியர் தேர்வுக்கு பணம் கட்டிய வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளது. இதற்கிடையில் தொற்று பரவல் காரணமாக கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்
நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா!?
- Get link
- Other Apps
நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா!? செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என மருத்துவ குழு தமிழக அரசிடம் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளின் பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பதா, இல்லையா, மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். முன்னதாக மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தினார். வரும் 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடையுள்ள நிலையில் அதை நீட்டிக்க தேவை உள்ளதா என்று மாவட்ட ஆட்சியர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இந்நிலையில் செப்டம்பர் மாதம் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது. அதே நேரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்தை தொடங்கலாம் என்றும் மருத்துவ குழு பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி உச்சநீதிமன்றம் தேர்வை நடத்தாமல் தேர்ச்சி வழங்கக்கூடாது:
- Get link
- Other Apps
தேர்வை நடத்தாமல் தேர்ச்சி வழங்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் &'கொரோனா வைரஸ் பிரச்னையை காரணமாக வைத்து, கல்லுாரி இறுதியாண்டு தேர்வை, டில்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா, அரியானா, மத்திய பிரதேசம், அரசுகள் ரத்து செய்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில், தேர்வு நடத்தாமல் வழங்கப்படும் பட்டங்களை அங்கீகரிக்க முடியாது&' என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதை எதிர்த்து, மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நீதிபதிகள் கொண்டஅமர்வு அளித்த தீர்ப்பு: கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேவை நடத்தலாம். ரத்து செய்ய தடை விதிக்க முடியாது. தேர்வை நடத்தாமல் மாநில அரசுகள், மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக்கூடாது. பட்டங்களை வழங்கக்கூடாது. கொரோனா காரணமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம். தேர்வை நடத்த இயலாது என மாநில அரசுகள் கருதினால், யு.ஜி.சி.,யை அணுகி, கால அவகாசம் கேட்கலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்
தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!
- Get link
- Other Apps
தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது! எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசில் பல அதிகாரிகள் சேர்ந்து வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்கலாம் என இயக்கலாம் முடிவெடுக்கின்றனர். பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை வகுத்து இருக்கின்றனர். பேருந்தில் ஏறும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அவ்வாறு முக கவசம் அணியவில்லை என்றால் பேருந்துகளில் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்தில் ஏறும் பயணிகள் அனைவருக்கும் (டெம்பரேச்சர்) காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்கப்படும் அவ்வாறு காய்ச்சல் இருப்பின் இருப்பின் அவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர் மேலும் பேருந்துகளை பொருத்தவரை மாவட்டங்களுக்கு இடையே .இயக்கப்படாது . என தெரிவிக்கப்பட்டுள்ளது உள்ளூர் பேருந்துகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது . .என அறிவித்துள்ளனர் இதன் மூலம் தொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்படும் என தெரிவித்துள்ளனர்
BE மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் பாஸ்: அரசு அதிரடி தொலைதூர கல்விக்கும் பொருந்தும்
- Get link
- Other Apps
BE மற்றும் இளங்கலை பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்கள் பாஸ்: அரசு அதிரடி தொலைதூர கல்விக்கும் பொருந்தும் சென்னை: கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு மிகப்பெரிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி என்னவென்றால், கல்லூரியில் இறுதிப்பருவத்தை (Semester Exam) தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தாலே பாஸ் ஆனதாக தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது. தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகன் (K. P. Anbalagan) இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் உயர்வு இல்லை. தேர்வுக்கான கட்டணம் செலுத்திவிட்டு தேர்வுக்காக காத்திருந்த அனைவரும் தேர்ச்சி. மேலும் இது தொலைதூர கல்வியில் பயின்று வந்த மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.
அரியர் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி!
- Get link
- Other Apps
இறுதி செமஸ்டர் தேர்வு தவிர, பிற செமஸ்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தேர்வு எழுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உரிய மதிப்பெண் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.ஏற்கனவே, இளநிலை பட்டப்படிப்பில், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கும், தொழில்நுட்ப பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும், முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், எம்.சி.ஏ., முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், நடப்பு செமஸ்டர் தேர்வில் மட்டும் விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்கு செல்ல ஜூலை 23ல் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கொரோனா நோய் தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடி
அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை!: பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் சூழல்..!!
- Get link
- Other Apps
சென்னை: போதிய ஆசிரியர்கள் இல்லாததால் தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் சூழல் உருவாகியிருக்கிறது. மாநில அரசுகளில் கல்வியியல் கல்லூரிகளை நிர்வகித்து வரும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்லூரிகளில் போதிய அளவில் பயிற்றுநர்கள் இல்லை என்று கூறியுள்ளது. இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கல்வியியல் உயர்கல்வி மையம், வேலூரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி மற்றும் கோவையில் உள்ள மகளிர் கல்வியியல் கல்லூரி ஆகியற்றிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பி.எட்., ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 100 மாணவர்களுக்கு குறைந்தது 32 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பி.எட். கல்லூரியில் வெறும் 9 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆசிரியர்கள் குறைவு புகார் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதனை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது
- Get link
- Other Apps
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்.13 வரை நடைபெற இருந்தது. இத்தேர்வை 9,39,829 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனர். இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் முந்தைய பருவங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததைப் போல, 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி பத்தாம் வகுப்பு மாணவரின் தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு பதிலளித்துள்ளது. அந்த பதில் மனுவில், அக்டோபர் 2வது வாரத்துக்குள் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. பத்தாம்வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் இறுதியில் தேர்வு நடக்கிறது. அக்டோபரில் தேர்வு முடிவுகள் வெளியாகும். பள்ளி மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மு
Supreme Court, SC decision on final year university exams 2020 is likely to be announced on August 26.
- Get link
- Other Apps
With the submissions complete, the SC would announce its verdict on the UGC Case and its Guidelines. SC Decision on UGC Case on Final Year University Exams 2020 likely on Aug 26 – Key arguments presented SC Decision on UGC Case on Final Year Exams 2020 soon S upreme Court, SC decision on final year university exams 2020 is likely to be announced on August 26. With the submissions complete, the SC would announce its verdict on the UGC Case and its Guidelines. Key HighlightsSC on August 18 has reserved its order and asked for the parties to submit their responses in writing with the court.Decision on whether final year university exams 2020 can be cancelled or not would be taken by the Supreme Court.UGC has maintained its stand that the degrees cannot be awarded without conducting final year examinations. Supreme Court of India, SC would be announcing the verdict on the UGC Case on final year university examinations. The court has not announced the decision today. As per the informati
சற்று முன் வெளியான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள் 24.08.2020
- Get link
- Other Apps
செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
- Get link
- Other Apps
செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பை தொடர்ந்து நாடுமுழுவதும் கடந்த மார்ச் 23 முதல் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைத் திறப்பதற்காக மத்திய அரசு வெறுமனே பரந்த தரநிலை செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) வெளியிடும், வகுப்பறையை எப்போது, எப்படி மறுதொடக்கம் செய்வது என்று முடிவெடுப்பதற்காக அந்தந்த மாநில அரசுகளுக்கு இறுதி முடிவு விடப்படும். செப்டம்பர் 1 ந்தேதி தொடங்கி நவம்பர் 14 ந்தேதி வரை படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது. வகுப்பறைகளின் சுத்திகரிப்புக்கு முக்கியத்துவம் மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கும
"எம்.எட்" படித்திருந்தால். கல்வியியல் கல்லூரிக்கு மாற்றம். கல்வித்துறை அறிவிப்பு.!!
- Get link
- Other Apps
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை கல்வியல் கல்லூரிக்கு மாற்றம் செய்ய கல்லூரி நிர்வாகம் தெரித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மற்றும் நெட், ஸ்லெட் அல்லது பிஹெச்டி டிகிரி படித்து முடித்து வேலை பார்த்து வரும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு பணியிடை மாற்றம் செய்ய கல்லூரிக் கல்வி இயக்ககம் முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்றவாறு மேற்குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பேராசிரியர்களுடைய விவரங்களை கல்லூரியிலிருந்து வாங்கி நாளைக்குள் மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல கல்வி இணை இயக்குனர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் உத்தரவிட்டிருக்கிறார்.
சற்று முன் வெளியான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள் 23.08.2020
- Get link
- Other Apps