அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை!: பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் சூழல்..!!
சென்னை: போதிய ஆசிரியர்கள் இல்லாததால் தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் சூழல் உருவாகியிருக்கிறது. மாநில அரசுகளில் கல்வியியல் கல்லூரிகளை நிர்வகித்து வரும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்லூரிகளில் போதிய அளவில் பயிற்றுநர்கள் இல்லை என்று கூறியுள்ளது.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கல்வியியல் உயர்கல்வி மையம், வேலூரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி மற்றும் கோவையில் உள்ள மகளிர் கல்வியியல் கல்லூரி ஆகியற்றிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பி.எட்., ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 100 மாணவர்களுக்கு குறைந்தது 32 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பி.எட்.
கல்லூரியில் வெறும் 9 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆசிரியர்கள் குறைவு புகார் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதனை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியான பேராசிரியர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
Comments
Post a Comment