தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்.13 வரை நடைபெற இருந்தது. இத்தேர்வை 9,39,829 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனர். இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் முந்தைய பருவங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததைப் போல, 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி பத்தாம் வகுப்பு மாணவரின் தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு பதிலளித்துள்ளது.
அந்த பதில் மனுவில், அக்டோபர் 2வது வாரத்துக்குள் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. பத்தாம்வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் இறுதியில் தேர்வு நடக்கிறது. அக்டோபரில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
பள்ளி மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
Comments
Post a Comment