டெல்லி உச்சநீதிமன்றம் தேர்வை நடத்தாமல் தேர்ச்சி வழங்கக்கூடாது:
தேர்வை நடத்தாமல் தேர்ச்சி வழங்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்
&'கொரோனா வைரஸ் பிரச்னையை காரணமாக வைத்து, கல்லுாரி இறுதியாண்டு தேர்வை, டில்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா, அரியானா, மத்திய பிரதேசம், அரசுகள் ரத்து செய்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில், தேர்வு நடத்தாமல் வழங்கப்படும் பட்டங்களை அங்கீகரிக்க முடியாது&' என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதை எதிர்த்து, மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நீதிபதிகள் கொண்டஅமர்வு அளித்த தீர்ப்பு: கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேவை நடத்தலாம். ரத்து செய்ய தடை விதிக்க முடியாது.
தேர்வை நடத்தாமல் மாநில அரசுகள், மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக்கூடாது. பட்டங்களை வழங்கக்கூடாது. கொரோனா காரணமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம். தேர்வை நடத்த இயலாது என மாநில அரசுகள் கருதினால், யு.ஜி.சி.,யை அணுகி, கால அவகாசம் கேட்கலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்
Comments
Post a Comment