எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தரவரிசை பட்டியல், வரும், 16ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2020 - 21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது, 3ம் தேதி துவங்கியது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை, அரசு இடங்களுக்கு பதிவு செய்த, 24 ஆயிரத்து, 900 மாணவர்களில், 23 ஆயிரத்து, 218 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். இதில், 19 ஆயிரத்து, 7 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு பதிவு செய்த, 14 ஆயிரத்து, 234 பேரில், 12 ஆயிரத்து, 577 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதில், 9,903 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம், இன்று மாலை, 5:00 மணியுடன் நிறைவடைகிறது.விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள், ஏதாவது திருத்தம் மேற்கொள்ள வேண்டி இர...