ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மனு
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.விழுப்புரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் 2013ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் கொடுத்துள்ள மனு;கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 7 ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு அரசு பணி வழங்கி உதவ வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியராக சேர அதிகபட்ச வயது 40 என்பதை தமிழக அரசு நீக்கம் செய்து, என்.சி.டி.இ., அறிவித்ததை இதற்கு முன்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று அரசு ஆணை வழங்கி உதவ வேண்டும்.கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கின்ற பட்சத்தில், தற்காலிக பணியிடங்களை உருவாக்கி தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டதை ரத்து செய்து, வயது முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment