மனை அறிவியல் பாடத்திட்ட வரைவு அறிக்கை யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
மனை அறிவியல் பாடத்திட்ட வரைவு அறிக்கை யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வியாளா்கள், மாணவா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க நவ.23 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்த பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்ய பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்தது. அதன்படி இயற்பியல், கணித அறிவியல் உள்பட 27 பாடங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.
அந்த வரிசையில் மனை அறிவியல் பாடத்துக்கான புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கையை யுஜிசி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு குறித்து கல்வியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் நவம்பா் 23-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment