தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் சாத்தியமா?.. சுகாதாரத்துறை செயலாளர் பதில்.!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா வைரஸானது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அரசின் நடவடிக்கை மற்றும் மக்களின் ஒத்துழைப்பு காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. மேலை நாடுகளில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தாக்க துவங்கியுளளதால், தமிழகம் மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலைக்குள் செல்லுமோ? என்ற பயம் எழுந்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அரசு பொது மருத்துவமனை மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையம், முருகன் கோவில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், " திருவள்ளூரில் ரூபாய் 350 கோடி செலவில் உருவாகிவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும். கொரோனா இரண்டாவது அலைக்கான சாத்தியக்கூறுகள் தமிழகத்தில் இல்லை " என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment