பள்ளி திறப்பு கருத்து கேட்பு அரசிடம் அறிக்கை தாக்கல்
பள்ளி திறப்பு கருத்து கேட்பு அரசிடம் அறிக்கை தாக்கல்
பொங்கல் விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்கள் தெரிவித்த கருத்து தொடர்பான அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் 2020 டிச. 2 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. இதையடுத்து பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. பொதுத்தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து ஜன. 6 முதல் பெற்றோர் அழைக்கப்பட்டு பள்ளிகளில் கருத்து கேட்கப்பட்டன.கருத்து கேட்பு கூட்டம் முடிந்த நிலையில் மாவட்ட வாரியாக பள்ளி கல்வி இயக்குனரிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த அறிக்கைகள் தொகுக்கப்பட்டு அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.பொது தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாக 85 சதவீத பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த அறிக்கை தலைமை செயலர், வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவால் ஆய்வு செய்யப்பட்டு முதல்வரிடம் அளிக்கப்படும். அதன்பின் முதல்வர் இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments
Post a Comment