எம்.எட். மாணவர் சேர்க்கை: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் உயர்கல்வித்துறை அமைச்சர்

 



அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். எனப்படும் முதுநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2020- 2021ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலைக் கல்வியியல் (எம்.எட்.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக 07-01-2021 முதல் 13-01-2021 வரை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ரூ.2 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.58 சேர்த்து ரூ.60 செலுத்தப்பட வேண்டும்.

மேலும், மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் அதே இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044-2235 1014, 044-2235 1015 மற்றும் 044-2827 6791 என்ற எண்களுக்குக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

இது தொடர்பாக care@tngasaedu.org மற்றும் tndceoffice@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்''.

இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.



Comments

Popular posts from this blog

TNTET 2020 Syllabus for Paper 2

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,