அரியர் தேர்வுகள் நடைபெறுமா? ரத்து செய்யப்படுமா? தலைமை வழக்கறிஞர் விளக்கம்!
சட்ட படிப்புகளுக்கான அரியர் தேர்வுகள் குறித்து சிண்டிகேட் குழு முடிவு எடுக்கும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்னும் உயர்நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரியர் தேர்வுகள் ரத்து:
தமிழக அரசு கொரோனா பரவல் அச்சத்தை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வினை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது. அதே போல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவால் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உட்பட பலரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் தற்போது கடைசியாக பல்கலைக்கழகங்கள் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடையினை வழங்கி உத்தரவிட்டனர். இப்படியான சூழலில் இன்று அண்ணா பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டிற்குள் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரியர் தேர்வுகளுக்கான கட்டணத்தை வரும் 20 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.
இது இப்படியாக இருக்க இன்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான விஜயநாராயணன் சட்ட படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை நடத்துவது குறித்து சிண்டிகேட் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். அவர்களின் முடிவே இறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment