சென்னையில் உள்ள பல கல்லூரிகள் இளங்கலை 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தயாராகி வருகின்றன.
சென்னையில் உள்ள பல கல்லூரிகள் இளங்கலை 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தயாராகி வருகின்றன. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு விடைத்தாள்கள் டிஜிட்டல் முறையிலேயே மதிப்பீடும் செய்யப்படுகிறது. 25 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பு ஆசிரியர் நியமிக்கப்படுகிறார்கள். தேர்வு முடிந்ததும் 30 நிமிடத்துக்குள் விடைத்தாள்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிட வேண்டும். தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். மொத்தம் 100 மதிப்பெண்கள். அரியர் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும். சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரிகளில் வருகிற 21-ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படுகிறது.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தாமதமானதால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் நடைபெறுகிறது.
Comments
Post a Comment