நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை UGC வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை UGC வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் ஒவ்வொருவரும் 6 அடி சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணியவேண்டும். அவ்வப்போது சோப்பு கொண்டு கைகளை கழுவவேண்டும்.
கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் ஆரோக்கிய சேது அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து வைத்திருக்கவேண்டும்.
மத்திய, மாநில அரசுகளால் பாதுகாப்பானது என்ற அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளை மட்டுமே திறக்கவேண்டும்.
அந்த கல்லூரிகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றவேண்டியது அவசியம்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள், பேராசிரியர்களை கல்லூரிகளுக்குள் வர அனுமதிக்கக்கூடாது.
சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
வகுப்பறைகளுக்கு வரத்தேவையில்லை என்று முடிவெடுக்கும் சில மாணவர்கள், வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை தேர்வு செய்யலாம்.
கல்வி நிறுவனங்கள் அதற்கான ஏற்பாடுகளை ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டு இருக்கவேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரம், உணவு, நீர் போன்றவற்றை முறையாக ஏற்பாடு செய்யவேண்டும்.
சமூக இடைவெளி பின்பற்ற முடியாத கல்லூரி வளாகங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்த வேண்டாம்.
கல்லூரிகள், கால அட்டவணையாக 6 நாட்கள் என்பதை பின்பற்றலாம்.
சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
வகுப்பறைகள் மற்றும் கற்றல் தளங்களில் இடம் இருப்பதை பொறுத்து, 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம்.
ஆன்லைன் கற்றல், கற்பித்தல் நடைமுறைகளுக்கு ஏற்ப பேராசிரியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
கல்லூரிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
அதேபோல், கல்லூரிகளின் அனைத்து நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தெர்மல் ஸ்கேனர் கருவி, கிருமிநாசினி திரவம், முகக்கவசம் வைக்கப்பட்டு இருக்கவேண்டும்.
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கவேண்டாம்.
கல்லூரி வளாகத்தில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றமாக இருக்கவேண்டும்.
நீச்சல்குளம் மூடப்பட்டு இருக்கவேண்டும்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட ஊழியர்கள், வயது முதிர்ந்த, கர்ப்பிணி பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களை முன்களப்பணிகளில் ஈடுபடுத்தவேண்டாம்.
கல்லூரி விடுதிகளில் அறைகளை பகிரக்கூடாது.அறிகுறி இருக்கும் மாணவர்களை எந்த சூழ்நிலையிலும் விடுதிகளில் தங்க அனுமதிக்கக் கூடாது.
ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தை தவறாமல் கண்காணிக்கவேண்டும்.
புத்தகங்கள், பிற கற்றல் பொருட்கள் மற்றும் சாப்பிடக்கூடிய பொருட்களை பகிர்வதை ஊக்கப்படுத்தக்கூடாது.
மாநில சுகாதாரத்துறை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் தொடர்பில் இருக்கவேண்டும்.
பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நிலைகளை பராமரிக்க வளாகங்கள் தயாராக இருக்கிறதா? என்பதை சுகாதாரத்துறை உறுதிசெய்யவேண்டும்.
உடல்நிலை சரியில்லாமல் மாணவர்கள் இருந்தால், அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவேண்டாம் என்பது போன்ற வழிகாட்டுதல்களை UGC வெளியிட்டுள்ளது.


For 1 std and 7 school open
ReplyDeleteNo,pls don't open the school. Student health is important
ReplyDeletePlsssss open our clg ...I can't stay in my house😭😭😭..I really missed my clg and also my frnds
ReplyDeletePlz dont open the schools and colleges....students health are important....it is very dangerous
ReplyDelete