கல்லூரிகள் திறப்பது குறித்து நவம்பர் 12 முடிவெடுக்கப்படும்
https://wwwshadowlink1995.blogspot.com/2020/11/12.html
தமிழகத்தில் நவ.16 முதல் கல்லூரிகள் திறப்பு..? அமைச்சர் அன்பழகன் விளக்கம்..!!
கல்லூரிகள் வரும் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றிய தகவல் வரும் 12 ஆம் தேதி இறுதியாக அறிவிக்கப்படும் என்று தமிழகத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு கல்லூரிகளை எப்போது திறக்கலாம்? என்று ஆலோசனை போய்க்கொண்டு இருக்கும் நிலையில், வரும் நவம்பர் 12 ஆம் தேதி இதை பற்றிய தகவல் கண்டிப்பாக வெளிவரும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சர் தகவல்:
கொரோனா அச்சம் உள்ள சூழலில் கல்வி நிறுவனங்களை திறக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆவலுடனும் அதே சமயம் குழப்பத்திலும் உள்ளனர்.
இதைப்பற்றி உயர்கல்வித் துறை அமைச்சரிடம் கேட்ட போது, பெற்றோர்களிடம் இதை பற்றிய ஆலோசனை கேட்ட பின்பு தான் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்
நவம்பர் 12 ஆம் தேதி அன்று அதை பற்றிய முழு தகவல் அரசு சார்பில் அறிவிக்கப்படும் அதுவரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ச்சியாக தமிழக அரசு சார்பில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment