10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது! - தமிழக பள்ளிக்கல்வித்துறை
10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது! - தமிழக பள்ளிக்கல்வித்துறை
10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனிலும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், 10-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், 5-ம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில் குறுவினா ஒன்றில், "இந்தி கற்க விரும்பும் காரணம்" என்று குறிப்பிட்டு, அதற்கான காரணங்களை பட்டியலிட்டு, சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களால் 10-ம் வகுப்பு பாடத்தில் இந்தி திணிப்பு என்று சர்ச்சை எழுந்த நிலையில், இந்தி திணிப்பு என்பது தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் , 5-ம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில், குறுவினா ஒன்றில் "தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் 3- வது மொழியைக் குறிப்பிட்டு காரணம் எழுதுக" என்று கேள்வி மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாகவும், 3-வது மொழி எது என்பது மாணவர்களின் விருப்பம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்


Comments
Post a Comment