மகாராஷ்டிரத்தில் அடுத்தாண்டு மே மாதம் வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் அடுத்தாண்டு மே மாதம் வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வர்ஷா கூறியதாவது,
"கரோனா தொற்றின் பரவல் இன்னும் குறையவில்லை. தற்போதைய நிலைமை சீரடைய சிறிது காலம் தேவைப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்தாண்டு மே மாதத்திற்கு முன்பு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை நடத்த முடியாது.
ஆசிரியர்கள் மீதமுள்ள பாடங்களை முடிக்க ஏதுவாக பாடத்திட்டத்தை எவ்வளவு தவிர்க்கலாம் என்பது குறித்து விவாதிக்க உள்ளோம்
நடப்பாண்டு பாடத்திட்டத்தில் இருந்து குறைந்தது 25 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
Comments
Post a Comment