மஞ்சள் கயிறில் தாலி கட்டுவதற்கு பின், இப்படி ஒரு மகத்தான காரணம் இருக்கா🙂?
நமது இந்து சமயத்தைப் பொறுத்தவரை, திருமணத்திற்கு மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது தான் காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கம். நம்முடைய முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திலும், ஏதாவது ஒரு அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கும்.
அது போலத்தான் மஞ்சள் நிற தாலியிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது. தாலி மஞ்சள் நிறத்தில் அமைந்திருக்கும். பெண்கள் அதில் குளிக்கும் போது மஞ்சள் பூசி குளிப்பது வழக்கம். மஞ்சள் ஒரு கிருமிநாசினி. மஞ்சளை நீரில் கரைத்து உடலெங்கும் பரவும் பொழுது, நமது உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்து தூய்மையுடன் இருக்க உதவும்.
திருமணமான அந்த பெண் அடுத்த மூன்று மாதங்களில் தனது வாரிசை சுமக்க தயாராகின்றாள்.அப்பொழுது அந்த பெண்ணிற்கு பல்வேறு தொற்று நோய்கள் உண்டாகும் அபாயம் ஏற்படும்.
கிருமிநாசினியான மஞ்சள் தாலியானது தாயையும் அவள் வயிற்றில் வளரும் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காகத் தான் தாலி மஞ்சள் கயிரில் கட்டுகின்றனர்
Comments
Post a Comment