பூமியின் வேகத்தை குறைத்து உலக நாடுகளை மிரள வைத்த சீனா..! அணையால் வந்த வினை..!
பூமியின் வேகத்தை குறைத்து உலக நாடுகளை மிரள வைத்த சீனா..! அணையால் வந்த வினை..!
சீனாவில் உள்ள த்ரீ கோர்ஜஸ் அணையால், பூமி சுற்றும் வேகம் 6 விநாடிகள் குறைந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலக அளவில் மிகப்பெரிய அணையாக கருதப்படும் "த்ரீ கோர்ஜஸ் அணை" சீனாவில் உள்ளது. தற்போது இந்த அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சுமார் 17 வருடங்களாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையின் நீர்மட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளதால், பல நகரங்கள் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.
மற்றொரு வியப்பு தரும் தகவல் என்னவென்றால், இந்த அணையில் ஒரே இடத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்குவதால் சுற்றும் பூமியின் வேகம் 6 விநாடிகள் குறைந்ததாக நாசா உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்த அணையில் 40 லட்சம் கோடி கிலோ கிராம் நீர் தேங்கி இருப்பதாலும் கடலின் மட்டத்தில் இருந்து அணை 181 மீட்டர் உயரத்தில் இருப்பதாலும் சுற்றும் பூமியின் வேகம் 6 விநாடிகள் குறைந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது.
பல காரணங்களால் பூமியின் சுற்றும் வேகம் அவ்வப்போது மாற்றத்தை சந்திப்பதால், இந்த அணையால் எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Comments
Post a Comment