அரசு கால்நடை மருத்துவர் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து கடந்த, 8 மாதங்களாக தேர்வர்கள் காத்திருக்கின்றனர்
அரசு கால்நடை மருத்துவர் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து கடந்த, 8 மாதங்களாக தேர்வர்கள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில், அரசு கால்நடை பராமரிப்பு துறைக்கு, 1,141 மருத்துவர்களை தேர்வு செய்ய, கடந்த பிப்ரவரியில் தேர்வு நடந்தது. அதில், 2,000க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். அது முடிந்து, 8 மாதமாகியும், இன்னும் முடிவு வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, தேர்வு எழுதியோர் கூறுகையில், 'அரசு கால்நடை மருத்துவமனை, மருந்தகத்தில் ஏராளமான மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில், 1,141 பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்தி, முடிவு வெளியாவது குறித்த தகவல் இல்லை. இதனால், தனியார் பணிக்கும் செல்ல முடியவில்லை.முடிவை, விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
Comments
Post a Comment