மீனவரின் வலையில் சிக்கிய 750கிலோ ராட்சத திருக்கை மீன் - வேடிக்கைபார்க்க குவிந்த மக்கள் !

 


மீனவரின் வலையில் சிக்கிய 750கிலோ ராட்சத திருக்கை மீன் - வேடிக்கைபார்க்க குவிந்த மக்கள் !

மங்களூருவில் ஆழ்கடலில் மீன்பிடித்த மீனவர் ஒருவரின் வலையில் இரண்டு பெரிய சைஸ் திருக்கை மீன்கள் சிக்கியுள்ளன.

750 கிலோ மற்றும் 250 கிலோ எடையுள்ள அந்த இரண்டு மீன்களும் அங்குள்ள துறைமுககரைக்குகொண்டுவரப்பட்டுள்ளது. அதனை காண உள்ளூர் மக்கள் பலர் பெருந்திரளாக திரண்டனர்
அந்த மீன்களின் வீடியோவும், படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.

எப்போதாவது இந்த மாதிரியான திருக்கை மீன்கள் வலையில் சிக்கும். சமூக வலைத்தளங்களில் அந்த போட்டோக்கள் ஷேர் ஆனதால் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது' என அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் மீனவ சங்க தலைவர்.

வியாபார நோக்கத்தோடு திருக்கை மீன்கள் பிடிக்கப்பட்டு வருவது அந்த இனத்தை அழித்து வருகிறது என அமெரிக்காவை சேர்ந்த NOAA Fisheries தெரிவித்துள்ளது.



Comments

Popular posts from this blog

TNTET 2020 Syllabus for Paper 2

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,