விஜயதசமி நாளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில், வரும் 26-ம் தேதி விஜயதசமி நாளன்று அரசுப் பள்ளிகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகள், பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Comments
Post a Comment