சேலம் அரசு மகளிர் தொழில் பயிற்சி மையத்தில் முதல் முறையாக ஃப்ரிட்ஜ், ஏா்கண்டிஷன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு துறையில் பெண்களுக்கு 2 வருட இலவச தொழிற்பயிற்சி நடைபெறுகிறது
சேலம் அரசு மகளிர் தொழில் பயிற்சி மையத்தில் முதல் முறையாக ஃப்ரிட்ஜ், ஏா்கண்டிஷன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு துறையில் பெண்களுக்கு 2 வருட இலவச தொழிற்பயிற்சி நடைபெறுகிறது
சேலம் அரசு மகளிர் தொழில் பயிற்சி மையத்தில் முதல் முறையாக ஃப்ரிட்ஜ், ஏா்கண்டிஷன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு துறையில் பெண்களுக்கு 2 வருட இலவச தொழிற்பயிற்சி நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக ஃப்ரிட்ஜ் மற்றும் ஏா்கண்டிஷன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வகையில் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக சேலம் அரசினா் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இரு வருட இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற எல்லா வயது பெண்களும் மாதம் தோறும் ரூ. 500 உதவித் தொகையுடன் இப்பயிற்சியை பெறலாம்.
தினசரி வீட்டிலிருந்து பயிற்சிக்கு வந்து செல்ல பேருந்து அட்டை, விலையில்லா லேப்டாப், சைக்கிள், புத்தகங்கள், சீருடை, காலணி ஆகியவை அனைவருக்கும் வழங்கப்படும்.
ஃபிரிட்ஜ் மற்றும் ஏா்கண்டிஷன் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பிரிவில் பயிற்சியை முடிக்கும் அனைவருக்கும், வளாகத் தோ்வு (கேம்பஸ் இன்டா்வியூ) மூலம் உடனடியாக வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவா்களுக்கு மாவட்ட தொழில்மையம் மூலம் சுயத்தொழில் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். ஃபிரிட்ஜ், ஏா்கண்டிஷன் பிரிவில் தனியார் துறைகளிலும், பொதுத் துறைகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருப்பதால் அனைத்து வயது பெண்களும் ஆா்வத்துடன் பயிற்சி பெறலாம்.
விருப்பமுள்ளவா்கள் சேலம் கோரிமேடு அய்யந்திருமாளிகை சாலையில் உள்ள அரசினா் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தை நேரிலோ அல்லது 9940966090 மற்றும் 9655147502 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

Comments
Post a Comment