11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.இதில் jதோல்வியடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. மேலும் மறு கூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த ஆகஸ்டில் வழங்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட மதிப்பெண்களுடன் கூடிய அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
பள்ளி மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
Comments
Post a Comment