தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தற்போது 10 ஆம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது


Comments
Post a Comment