D.T.Ed B.Ed M.Ed மாணவர்களின் தேர்வுகள் குறித்து என்ன நிலை தேர்வுகள் நடத்தப் படுமா ரத்து செய்யப்படுமா கல்வியற் கல்லூரி மாணவர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர்
D.T.Ed ஆசிரியர் பட்டய தேர்வை ரத்து செய்ய கோரிக்கை
புதுச்சேரி : ஆசிரியர் பட்டய தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகறித்து வாசவி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சுதா விடுத்துள்ள அறிக்கை:ஆசிரியர் பட்டய பயிற்சி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இம்மாதம் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் 48 நாள் பள்ளி பயிற்சிக்காக பள்ளிக்கு சென்றிருந்தனர், பயிற்சி முடிந்து மார்ச் மாதம் கல்லுாரி திரும்ப வேண்டிய சூழலில் கொரோனா ஊரடங்கால், மார்ச் மாதம் முதல் கல்லுாரிகள் மூடப்பட்டது.இதனால், பயிற்சி மாணவர்களின் பாடங்கள் இன்னும் முடிவு பெறவில்லை.
இந்நிலையில், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தயார் நிலையில் இல்லை.மேலும், முழு ஊரடங்கு காரணமாக மாணவர்கள் அவர்களின் சொந்த கிராமங்களுக்கு சென்றுள்ளனர். போக்குவரத்து வசதியும் இல்லை. கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழக அரசு கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்தது. அதுபோல், ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். குறைந்த பட்சம் முதலாமாண்டு தேர்வினை மட்டுமாவது ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
B.Ed & M.Ed
கல்வியல்
கல்லூரி தேர்வு-2020
இருக்கா? இல்லையா?
தேர்வுகள் ரத்து செய்யப்படுமா?
Comments
Post a Comment