பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்கள் : தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம் - ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி
பல்கலைகழக மானிய குழுவின் அறிவிப்பை தொடர்ந்து சென்னை பல்கலைகழகம் உள்பட பல்வேறு பல்கலைகழகங்கள் மாணவர்கள் தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம் என்று அறிவித்தது. இந்தநிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகமும் பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்களை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வை மாணவர்கள் வீட்டில் இருந்தே எழுதலாம் என்றும் விடைகளை 40 பக்கத்திற்கு மிகாமல் எழுதி கல்லூரி முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments
Post a Comment