தொழில்நுட்பக் கோளாறால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் : அண்ணா பல்கலை.அறிவிப்பு!!!
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் முறையாக மாணவர்கள் ஆன்லைனில் தேர்வை சந்திப்பதால், அதற்கு முன்னோட்டமாக மாதிரி தேர்வு கடந்த 19, 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 22-தேதி 'பிராஜெக்ட்' மற்றும் நேர்காணல் தேர்வு நடைபெற்றது. தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு கட்ட அறிவிப்புகளை வெளியிட்டது.
பின்னர் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதிப்பருவத் தேர்வு, செப்டம்பர் 24ம் தொடங்கி 29ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.
ஒரு லட்சத்து 41 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில் வியாழன் அன்று தொடங்கிய தேர்வில், 90 விழுக்காடு மாணவர்கள் எவ்வித தொழில்நுட்பத் தடையுமின்றி தேர்வு எழுதினர். எனினும் மொபைல் மற்றும் இணையதள சிக்னல் கோளாறு காரணமாக, 10 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதமுடியாமல் போனது.
அவர்களுக்கு பின்னர் தேர்வு நடத்துவது குறித்து வாய்ப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இனிவரும் தேர்வுகளிலும் எந்த சிக்கலும் இல்லாத வகையில் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது
Comments
Post a Comment