சற்றுமுன் வெளியான தகவல் யுஜிசி அதிரடி உத்தரவு கல்லூரி மாணவர்களுக்கு

 



திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான வகுப்புகள் நவம்பர் மாதமே தொடங்க வேண்டும். அதற்கேற்ப, அனைத்து பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கையை அக்டோபருக்குள் முடித்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்லூரிகளுக்கு பல்வேறு விதிமுறைகளையும் பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.

* நவம்பரில் கல்லூரிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை. புதியதாக சேருபவர்களுக்கு ஆன்லைன் கல்லூரி வகுப்புகள் ெதாடங்கப்படும்.

* நவம்பரில் வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அவர்களுக்கான கல்வி ஆண்டு 2021 ஆகஸ்ட் 30 வரை நடக்கும்.
* கொரோனா தொற்றுக்காக விடப்பட்ட விடுமுறைகளை சரிகட்டும் வகையில், இந்த கல்வியாண்டில் வாரத்துக்கு 6 நாட்கள் கல்லூரி வகுப்பு நடக்கும்.
* அதனடிப்படையில், குளிர்கால மற்றும் கோடை கால விடுமுறைகள் ஏதும் விடாமல் தொடர்ந்து பாடங்களை நடத்த வேண்டும்.
* அதேபோல அனைத்து பல்கலைக்கழகங்களும் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும். அவர்களுக்கும் எந்த விடுமுறையும் கிடையாது.







Comments

Popular posts from this blog

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,

TNTET 2020 Syllabus for Paper 2