பள்ளி மாணவர்களுக்காக 40 சதவீதம் குறைத்த அமைச்சர் செங்கோட்டையன்..மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதால் இனி பள்ளிகள் திறந்தாலும் 100 சதவீத பாடங்களை நடத்தி முடிக்க முடியாது என்பதால் பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மட்டும் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இத்தகைய சூழலில், ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது, கல்வி குழு தந்த அறிக்கை அடிப்படையில் இந்த ஆண்டு மட்டும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எத்தனை தேர்வுகள் வந்தாலும் மாணவர்கள் அத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வில் 90 சதவீத கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் பள்ளிகள் திறப்பிற்கு பின் விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என குறிப்பிட்ட அவர் சனிக்கிழமைகளில் கல்வி தொலைக்காட்சிகளில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
தமிழகத்தில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளதால் இந்த கல்வி ஆண்டுக்கு 60 சதவீதம் பாடங்கள் மட்டுமே நடத்தப்பட உள்ளன. இதனால் மாணவர்களின் கல்விச்சுமை குறையும்.
Comments
Post a Comment