கோவை:இளங்கலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, செப்., 21ம் தேதி முதல் தேர்வுகள் நடக்கும் என, பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
வரும் 21ம் தேதி முதல்
பட்டப்படிப்பு தேர்வுகள்
கோவை:இளங்கலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, செப்., 21ம் தேதி முதல் தேர்வுகள் நடக்கும் என, பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும், 21ம் தேதி முதல் துவங்கும். இதுகுறித்து, அந்தந்த கல்லுாரி முதல்வர்கள் மாணவர்களை தொடர்பு கொண்டு, உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்வு அட்டவணை விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். இறுதியாண்டு பிராஜக்ட், பிராக்டிக்கல் தேர்வு வைக்கவில்லை என்றால், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, எழுத்து தேர்வுகள் முடிந்தபின், அந்த தேர்வுகளை நடத்தி கொள்ளலாம்.
இன்டர்னல் மதிப்பெண் பட்டியல் வழங்காமல் இருப்பவர்கள், விரைவில் வழங்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Comments
Post a Comment