இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடைபெறும். இதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெயிடப்படும். மேலும் மாணவர்கள் தேர்வை நேரில் வந்து எழுத தேவையான ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் B.Arch படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் தகவல்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தை மாணவர்கள் அணுகலாம்.

Comments
Post a Comment