எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை., அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை!
எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை., அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை!
2019 -20 மற்றும் 2020 -21 ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர் சேர்க்கை விவரத்தை, வரும் 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகையான உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2019 -20 கல்வியாண்டில், எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கையையும், 2020 21 ஆம் கல்வியாண்டில் வருகிற 30-ஆம் தேதி வரை, எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் மொத்த எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை தகவல்களை அடுத்த மாதம் ஏழாம் தேதி மாலை 5 மணிக்குள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அந்த சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.

Comments
Post a Comment