B.Ed படிப்பதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்
சிறப்பு கல்வி ஆசிரியர் பட்டப்படிப்பு சேர்க்கை இன்றுமுதல்நடைபெறுகிறது. சேர்க்கை குறித்து பல்கலை பதிவாளா் கே.ரத்னகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளதாவது: 2021ம் ஆண்டுக்கான பி.எட் (Special Education Teacher) சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு,இன்று (அக்.1) தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுவதாககூறப்பட்டுள்ளது. மேலும் இந்த BEd சிறப்புக் கல்வி படிப்பானது பாா்வைக் குறைபாடு,செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளில் சேரலாம் என்றும் அவ்வாறு சேரும் மாணவ சிறப்புக்கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலானது தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும்வழங்கப்படுவதாகவும்கூறப்பட்டுள்ளது பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் அக்.,31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 044 2430 6617, 84285 75967, 98416 ...