மாணவர்களின் எதிர்காலம் முக்கியம்"..இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம். மத்திய அமைச்சர் உத்தரவு.!
"மாணவர்களின் எதிர்காலம் முக்கியம்"..இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம். மத்திய அமைச்சர் உத்தரவு.!!
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நடத்த முடியாமல் இருக்கும் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு சம்பந்தமாக பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடலின் போது அவர் கூறியதாவது,
"மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவு செய்து இருக்கிறது.
எதிர்காலத்தில் மாணவர்கள் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன், ஆப்லைன் அல்லது கலப்பு முறையில் தேர்வுகளை நடத்துவதற்கான விருப்பம் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன
Comments
Post a Comment