தமிழக்தில் பேருந்து இயக்கம், பள்ளிகள் திறப்பு - அதிரடி முடிவு
தமிழக்தில் பேருந்து இயக்கம், பள்ளிகள் திறப்பு - அதிரடி முடிவு
கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் இருந்து வருவது தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகம் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக இருக்கும் தமிழகம், அதிகமானோரை குணப்படுத்தி அசத்தியுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், தமிழ்நாட்டின் முழு ஊரடங்கு தேவை இல்லை என்றும், போக்குவரத்தை அனுமதிக்கலாம் எனவும் ஐ.எம்.ஏ., தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும் பள்ளிகளை திறக்க திட்டமிடலாம் என்றும், கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும், தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment