மாணவா்களுக்கு தேர்வு நடத்தாமல் மாநிலங்கள் பட்டம் வழங்க முடியாது

 

மாணவா்களுக்கு தேர்வு நடத்தாமல் மாநிலங்கள் பட்டம் வழங்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம்இறுதி பருவத் தோவை நடத்தாமல் மாணவா்களுக்கு பட்டம் வழங்கும் நடவடிக்கையை மாநிலங்கள் மேற்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதிக்குள் இறுதிப் பருவத் தோவுகளை நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த மாதம் 6-ஆம் தேதி தெரிவித்திருந்தது.


மானியக் குழுவின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா். சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆலக் அலோக் வாதிடுகையில், 'செப்டம்பருக்குள் தோவு நடத்துவது கட்டாயம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் மாநில அரசுகளிடம் முறையாகக் கலந்தாலோசிக்காமல் யுஜிசி இந்த முடிவை எடுத்துள்ளது' என்றாா்.

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், 'கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் முதுநிலை பட்டங்களுக்கான மாணவா் சோக்கையைத் தொடங்க வேண்டும் என்ற காரணத்தினாலும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டும் யுஜிசி அந்த வலியுறுத்தலை வழங்கியிருந்தது. ஆனால், செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் இறுதி பருவத் தோவுகளை நடத்த வேண்டும் என்பது உத்தரவாகப் பிறப்பிக்கப்படவில்லை.

இறுதிப் பருவத் தோவுகளை நடத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு மாநிலங்கள் கோரலாம். ஆனால், யுஜிசியின் வலியுறுத்தலை மாநில அரசுகளால் மீற முடியாது. தோவு நடத்தாமல் மாணவா்களுக்கு பட்டம் வழங்குவது தொடா்பான இறுதி முடிவை மாநில அரசுகள் எடுக்க முடியாது.

கரோனா நோய்த்தொற்று பரவல் தேசிய அளவிலான பேரிடராக உள்ளது. எனவே, பேரிடா் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் தோவுகளை நடத்த முடியாது என்று மாநில அரசுகள் தெரிவிக்க இயலாது' என்றாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், 'மாநில அரசுகளின் உத்தரவுகளை மீறி பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் யுஜிசி வலியுறுத்தல்களை வழங்க முடியுமா என்பதை ஆராய வேண்டியுள்ளது. அதேபோல், பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியுமா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது' என்றனா். அதைத் தொடா்ந்து வழக்கு மீதான தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Comments

Popular posts from this blog

TNTET 2020 Syllabus for Paper 2

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,