ஓராண்டாக நீடிக்கும் B.Ed தேர்வில் குளறுபடி ஆசிரியர் பல்கலை மீது அதிருப்தி

 சென்னை; கடந்த ஆண்டு, பி.எட்., தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை தீர்க்காமல், பல்கலை நிர்வாகம், ஓராண்டாக அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செமஸ்டர் தேர்வுதமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 2018 - -19ம் ஆண்டில் இருந்து, இரண்டு ஆண்டு களாக படிப்பு காலம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு களை, 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.
 இதற்கான முடிவுகளை, ஆகஸ்டில் பல்கலை நிர்வாகம் வெளியிட்டது. மதிப்பெண் விபரங்கள் கல்லுாரிகளுக்கு அனுப்பப்படாமல், பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், பல மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மாறியிருந்தன. தேர்வே எழுதாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றனர். நன்றாக படிக்கும் மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றனர். இதற்கு, தொழில்நுட்ப கோளாறே காரணம் என, கண்டறியப்பட்டது. இது குறித்து, பல்கலைக்கு புகார்கள் அனுப்பப்பட்டதால், மறுகூட்டல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
குற்றச்சாட்டு
ஆனால், ஓராண்டாகியும், மறுகூட்டல் மேற்கொள்ளாமலும், விடைத்தாள் நகல்களை வழங்காமலும், பல்கலை நிர்வாகம் அலட்சியமாக உள்ளதாக, மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு கட்டணம் பெறும் பணி துவங்கியுள்ளது. கடந்த, 2019ல் நடந்த குளறுபடிக்கே இன்னும் தீர்வு ஏற்படாமல், புதிய தேர்வுக்கு கட்டணம் பெறுவதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Comments

  1. Thanks the for the news for me also 1 paper re- appear what to do now & How to escalate

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET 2020 Syllabus for Paper 2

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,