மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை 30 சதவீதம் வரை பள்ளி பாடத்திட்டங்களை குறைக்கலாம்.
எந்த பாடங்களை நீக்குவது, பாடத்திட்டத்தை எப்படி குறைப்பது என்பது தொடர்பாக ஏற்கனவே நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.அதன்படி
30 சதவீதம் வரை பள்ளி பாடத்திட்டங்களை குறைக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தரப்பிலான இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள். 2020 - 2021ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் அதன் பின்பாக நடத்தப்படக்கூடிய பாடங்களை கணக்கில் கொண்டு அந்த பாடங்களில் இருந்து கேள்வி தாள்களை தயாரித்து தேர்வெழுத வைக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.
Comments
Post a Comment