10ஆம் வகுப்பு வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. ஆகஸ்ட் 10ல் வெளியாகும்.. தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. ஆகஸ்ட் 10ல் வெளியாகும்.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 10 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும். மாணவர்களுக்கு எவ்வளவு மதிப்பெண் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தமிழக கல்வித்துறை இணைய பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ரிசல்ட்டை tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே 10ம் வகுப்பில் மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் மதிப்பெண் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இறுதி தேர்வுக்கான மதிப்பெண் எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் இந்த மதிப்பெண் வழங்கப்படும். வகுப்பில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 80% மதிப்பெண் எடுக்கப்படும். வருகைப்பதிவேடு அடிப்படையில் 20% மதிப்பெண் எடுக்கப்படும். இதன் மூலம் 100% மதிப்பெண் கணக்கிடப்பட்டு இறுதி மார்க் சீட் வழங்கப்படும்.
Comments
Post a Comment