புதிய கல்வி கொள்கையின் கீழ் எம்.பி.எல். படிப்புகள் இனி இல்லை; கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
புதிய கல்வி கொள்கையின் கீழ் எம்.பி.எல். படிப்புகள் இனி இல்லை; கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
- இதுவரை மத்திய மனிதவளத்துறை என்று இருந்தது இனிமேல் மத்திய கல்வித்துறை என்று மாற்றப்படுகிறது. தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளளது.
- புதிய கல்விக் கொள்கையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் அமித் காரே கூறுகையில், ''உயர் கல்வி நிலையங்களில் 2035 ஆம் ஆண்டுக்குள் 50% சேர்க்கையை உயர்த்துவது என்று புதிய தேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது 21ஆம் நூற்றாண்டுக்கானது.
- மும்மொழி கொள்கை, கைத் தொழில். 3,5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு.. புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?
- கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும்
- 6ம் வகுப்பு முதல் கைத்தொழில் கட்டாயம் கற்றுத்தரப்படும்
- இளங்கலை 3-4ஆண்டுகள் நடத்தப்படும்
- முதுகலை 1-2 ஆண்டுகள் நடத்தப்படும்
- இண்டகிரெட் இளங்கலை, முதுகலை இரண்டும் 5 ஆண்டுகள் அனுமதிக்கப்படும்
- உயர் கல்வி நிலையங்களில் தன்னாட்சி உரிமம் அளிக்கப்படுகிறது
- 15 ஆண்டுகளில் சுயாட்சி முறை ஒழிக்கப்படும்
- உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும்
- இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்
- பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம்
- M.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு
- இதுவரை டீம் பல்கலைக் கழகங்களுக்கு, மத்திய பல்கலைக் கழகங்களுக்கு என்று வேறு வேறு நடைமுறைகள் இருந்தன. இனி அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் தரம் மற்றும் விதிமுறைகள் ஒரே மாதிரி இருக்கும்.
- இன்ஜி., போன்ற படிப்பில் ஓரிரு வருடம் விடுப்பு எடுத்துவிட்டு படிப்பை தொடரலாம்
- 6ம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி பாடங்கள் அறிமுகம்
- 12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அமலில் இருக்கும்
- 5ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும்
- மதிப்பெண்கள் அடிப்படையில் இல்லாமல் ரிப்போர்ட் கார்டு திறன் அடிப்படையில் இருக்க வேண்டும்
- இளங்கலை சுயாட்சி, கல்வி, நிர்வாகம் மற்றும் நிதி சுயாட்சி ஆகியவை கல்லூரிகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இந்தியாவில் 45,000 க்கும் மேற்பட்ட இணை (Affiliated) கல்லூரிகள் உள்ளன.
- தேசிய தேர்வு மையம் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் தேர்வுகள் நடத்தும். இந்தத் தேர்வுகள கட்டாயம் இல்லை. விருப்பப்பட்டால் மட்டுமே நடத்தலாம்
- வாழ்க்கை திறன் கல்வி ஒவ்வொரு ஆண்டும் கற்பிக்கப்படும். திறன் அடிப்படையில் ஆசிரியார்களால் மதிப்பீடு செய்யப்படும். இதுகுறித்த மதிப்பீடு அறிக்கை மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். சிபிஎஸ்இயில் கணக்கு தேர்வு போல அனைத்து பாடங்களும் இரண்டு மொழிகளில் நடத்தப்படும். அறிவின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும்.
- அறிவியல், கணிதம் ஆகியவை ஒரு பாடமாக இருக்க வேண்டும். விளையாட்டு, கலை, வர்த்தகம், அறிவியல் ஆகியவையும் வேறு பிரிவாக இருக்க வேண்டும். ஆறாம் வகுப்பில் இருந்தே மாணவர்கள் தங்களது விருப்பப் பாடங்களை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். தேர்வு மாணவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும்.
- வளர்ந்து வரும் கல்விக்கு ஏற்ப பள்ளிக் கல்வி அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 5-3-3-4 என்ற புதிய கல்வி அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. ஐந்தாண்டு அடிப்படைக் கல்வி, மூன்றாண்டு ஆயத்தக் கல்வி, நடுநிலைக் கல்வி, நான்காண்டு உயர்நிலைக் கல்வி என்று மாற்றப்படுகிறது
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்வித்துறையில் தற்போது 4.43% ஆக இருக்கும் பொது முதலீடு 6%ஆக உயர்த்தப்படும்
- மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்
- குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி பாடத்திட்டங்களை இனிமேல் மத்திய கல்வித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பழங்குடியினர் விவகாரத்துறை ஆகிய அமைச்சகங்கள் நிர்ணயிக்கும்.
- தொழில்நுட்ப அடிப்படையிலான ஆன் லைன் கல்வி, ஆப், டிவி வழி கல்வி, ஆன் லைன் புத்தகங்கள், நூலகங்கள் ஆகியவை தரம் உயர்த்தப்படும்
- objective type and descriptive type அடிப்படையில் annual/semester/modular Board தேர்வுகள் நடத்தப்படும்
- தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்
- 12ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி
- தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு தர நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
- மாணவர்கள் உள்ளூர் கைவினை தொழில்களை கற்றுக் கொடுக்க நடவடிக்கை
- இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் அவர்களுக்கு கல்வி கொடுப்பது ஆசிரியர்களின் பொறுப்பு
- புத்தகக் கல்வி மட்டுமின்றி செய்முறை, விளையாட்டு ஆகியவையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
- மாநில மொழிகளுக்கு இணையாக புதிய பாடங்கள் புதிய கல்வி கொள்கையில் இடம் பெறும்
- மாநில மொழிகளில் கல்வி கற்க மாணவர்களுக்கு பாட திட்டங்கள் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்படும்
- செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களின் பயன்பாட்டிற்காக இந்திய சைகை மொழி (ஐ.எஸ்.எல்) நாடு முழுவதும் தரம் உயர்த்தப்படும். அவர்களுக்கு தேவையான பொருட்களின் தரமும் உயர்த்தப்படும்
Comments
Post a Comment