பள்ளிகள் எப்போது திறக்கலாம் பெற்றோர்களிடம் மத்திய அரசு கருத்துக்களை கேட்டு வருகின்றனர்
சொல்லுங்க..! எப்போது பள்ளிகளை திறக்கலாம்..? கருத்து கேட்க களத்தில் இறங்கிய மத்திய அரசு
பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்று மக்களிடம் மத்திய அரசு கருத்துகளை கேட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக மார்ச்சில் இருந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகததால் ஆன் லைன் வகுப்பகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பெற்றோர்களிடம் இது குறித்து கருத்துகள் கேட்க ஆரம்பித்து உள்ளது. மனித வளத்துறை அமைச்சகம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது.
மத்திய அரசு ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் இந்த மூன்று மாதங்களில் எந்த மாதத்தில் திறக்கலாம் என்பது குறித்து கருத்துகளை கூறலாம்.
இந்த கருத்துகளை வரும் 20ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும், மின்னஞ்சல் மூலமாகவும் ஆலோசனை சொல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.
October
ReplyDelete