டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: துணை முதல்வர் அறிவிப்பு
டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: துணை முதல்வர் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 5,15,385 ஆக உயர்வு!
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக உயர்வு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்வு!
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்!

டெல்லியில் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் பள்ளி பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்‘கொரோனா பாதிப்பால் டெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்கும் மதிப்பீட்டு அளவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் டெல்லியில் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டாம் என அரசு முடிவெடுத்துள்ளதாகவும் மனிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார். கொரோனா பாதிப்பால் இந்த செமஸ்டரில் போதிய வகுப்புகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தேர்வை நடத்திவதில் எந்த அர்த்தமும் இருக்காது என டெல்லி அரசு நம்புவதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment