பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியான நிலையில் மறுகூட்டல் மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள்களை பெறுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.
வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்றே இந்த விவரங்கள் அளிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் அரசு தேர்வுகள் துறை அது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வாயிலாகவும் மறுகூட்டல் மறுமதிப்பீடு விடைத்தாள் நகல்களை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆன்லைனில் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல்களை பெற்ற பின்னரே மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் பெற 275 ரூபாயும்
மறுமதிப்பீட்டிற்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாயும் இதர பாடங்களுக்கு மாணவர்கள் 205 ரூபாய்கட்டணம் செலுத்த வேண்டும்.
Comments
Post a Comment