பல்கலைக்கழக பைனல் செமஸ்டருக்கு தேர்வு உண்டா இல்லையா.. ஆகஸ்ட் 10ம் தேதி தெரியும்!

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஒத்தி வைத்தது.
பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதற்கு மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம் ஒன்றை நேற்று தாக்கல் செய்து இருந்தது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மூடப்பட்டு இருக்கும் என்று நேற்று முன்தினம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் இறுதித் தேர்வுகளில் மீதம் இருக்கும் பாடங்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, கடந்த கல்வி ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சியை அறிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
செப்டம்பரில் தேர்வு
இந்த நிலையில் பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் கேள்விக்குறியானது. இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டு, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.
வேலை வாய்ப்பு இழப்பு
இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் அனுபா ஸ்ரீவஸ்தவா சஹாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் சார்பில் இவர் தாக்கல் செய்து இருந்தார். கொரோனா தொற்று நோய் பரவலுக்கு இடையே தேர்வு எழுதுவதற்கு மாணவர்களை கட்டாயப்படுத்துவது யுஜிசி வழிகாட்டுதலுக்கு எதிரானது என்று மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். மேலும் தேர்வுகளை ஒத்திவைப்பதால், தங்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தனர்.
யுஜிசி பிரமாண பத்திரம்
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது, பதில் மனு தாக்கல் செய்யுமாறு யுஜிசிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, யுஜிசி சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வேறு தேதியில் வாய்ப்பு
அதில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை. நடப்பாண்டில் வரும் செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களும் இறுதி செமஸ்டர் தேர்வை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு, செப்டம்பரில் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வேறு தேதி ஒன்றில் வாய்ப்பு வழங்க வேண்டும். இறுதியாண்டு தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
டெல்லியில் தேர்வு ரத்து
மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில், இளங்கலை, முதுகலை மாணவர்களின் தேர்வை ரத்து செய்துள்ளனர். தேர்வை நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குவது யுஜிசி வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் துவங்கியது.
அறிக்கை ஆய்வு
அப்போது மாணவர் யாஷ் துபே சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி ஆஜரானார். அவர் வாதிடுகையில், ''எந்தவொரு தெளிவான விளக்கங்களும் இல்லாமல் யுஜிசி பதில் அளித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் இருக்கும் வித்தியாசத்தை ஆய்வு செய்ய வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
ஆதித்ய தாக்கரே
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவர்களில் முக்கியமானவர்கள் யுவ சேனா அமைப்பினர். சிவ சேனா அமைப்பின் ஒரு அங்கமான இந்த அமைப்பினர் இதன் தலைவர் ஆதித்ய தாக்கரே வழிகாட்டுதலின் பேரில் மனு தாக்கல் செய்தனர். மாநிலங்களின் நிலைமையைப் பொருத்து தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
ஆகஸ்ட்டில் விசாரணை
இதுதொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் ஆகஸ்ட் பத்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அவர்கள் கடந்த கல்வியாண்டில் வாங்கி இருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment