ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் கிடைக்கும்- இந்திய நிறுவனம் நம்பிக்கை

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் நவம்பர் மாதம் ரூ.1000 விலையில் கிடைக்கும்- இந்திய நிறுவனம் நம்பிக்கை





ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும், இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது.
புதுடெல்லி:

உலகை உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும், இந்த தடுப்பூசி ரூ .1,000 விலையில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது.

இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறியதாவது:-

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு  சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூச்சியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும் - அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி டோஸ்கள் கிடைக்கும்.



200 மில்லியன் டாலர்களை சோதிக்கப்படாத இந்த் தடுப்பூசி மருந்துக்கு ஒதுக்க முடிவு செய்ய சரியாக 30 நிமிடங்கள் ஆனது.  மீதமுள்ள கட்டங்களில் மருத்துவ பரிசோதனைகள் நல்ல பலன்களைப் பெறாவிட்டால், முழு பங்கும்  போகும் அபாயங்கள் உள்ளன.

"ஆகஸ்டில் இந்தியாவில் 3 ஆம் கட்ட சோதனைகளுக்குச் செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது முடிவடைய இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் ஆகும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று சொன்னால் உற்பத்தியை தொடங்குவோம்.

தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அது எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது, எத்தனை பேரை அது பாதுகாக்கும் என்பது தெரியவில்லை என கூறினார்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு - முதல் ஆண்டு, Diploma in Teacher Education (DTEd) - First Year,

TNTET 2020 Syllabus for Paper 2

How To Download D.T.Ed 2 Year Books