பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்
பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்
பியாஜே அறிதிறன் வளர்ச்சி
பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்
மனிதன் வெளி உலகம் பற்றி அறிந்து கொள்ளஅவனுக்கு புலன் உணர்வு புலக்காட்சி கவனம்சிந்தனை ஆராய்ந்தறிதல் போன்ற உளச்செயல்கள்பெரிதும் உதவுகின்றன. இவற்றின் துணையுடன்மொழியையும் பயன்படுத்தி தன் அனுபவங்களைவலுப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறுஅனுபவங்களைப் பெறுவதற்கு
உளச்செயல்களைப் பயன்படுத்தும் ஆற்றலைஅறிதிறன் என்று அழைக்கிறோம்.
· அறிதிறன் வளர்ச்சி
அறிதிறன் கட்டமைப்பு
மூளையின் உயிரியல் முதிர்ச்சி மற்றும் தனிப்பட்டஅனுபவங்களுக்கிடையே ஏற்படும் இடைவினையின்காரணமாக அறிதிறன் வளர்ச்சி ஏற்படுவதாகசுவிட்சர்லாந்து உளவியல் அறிஞர் ஃபியாஜேகருதுகிறார். இயற்கையிலேயே குழந்தைகள்அறிஞர்களாகப் பிறந்தவர்கள். இவர்கள்உலகைப்புரிந்து கொள்ளும் முயற்சியில்ஈடுபடுகின்றனர். இதற்கென மூளை அறிதிறன்கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது.
ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனையின் மாதிரிகள்அடங்கிய உள்கட்டமைப்பினைத் தான் அறிதிறன்கட்டமைப்பு என்று அழைக்கிறோம்.
உலகச் சூழலுடன் இடைவினை ஏற்படுத்திக் கொள்ளஇவ்வறிதிறன் கட்டமைப்பு நமக்கு உதவிபுரிகின்றது.
இவ்வறிதிறன் கட்டமைப்பில் உட்கிரகித்துதன்வயபடுத்தலும் இடம் கொடுத்தலும்அடங்குகின்றன.
A ) உட்கிரகித்துத் தன்வயபடுத்தல்
ஏற்கனவே உள்ள அறிதிறன் கட்டமைப்பில் புதியஅனுபவங்களை இணைத்துக் கொள்ளுதலைஉட்கிரகித்துத் தன்வயபடுத்தல் என அழைக்கிறோம்.
உதாரணமாக, தொலைக்காட்சி பெட்டிபூனைக்குட்டி பற்றிய அறிதிறன் கட்டமைப்பினைகுழந்தை ஏற்கனவே பெற்றிருப்பதாகவைத்துக்கொள்வோம். ஒரு குழந்தை முதன் முதலாககணிப்பொறியைப் பார்க்கும்போது உருவம், அளவு,உயரம் இவற்றைப் பார்த்து அதனை தொலைக்காட்சிபெட்டி என்று ஆச்சரியத்துடன் அழைக்கிறது. பின்னர்வேறுபாடுகளை உணர்ந்து இது வேறொருபொருளாகும் என்று அறிகிறது. இவ்வாறு புதியஅனுபவத்திற்குப் பொருள் தந்து ஏற்கனவே உள்ளஅறிதிறன் கட்டமைப்பில் இணைத்துக் கொள்கிறது.
B) இடம் கொடுத்தல்
ஏற்கனவே உள்ள அறிதிறன் கட்டமைப்பு புதியஅனுபவங்கள் வாயிலாக மாற்றம் பெறுதலை இடம்கொடுத்தல் என்று அழைக்கிறோம். வளர்ந்தநிலையில் உள்ள அணிலை பூனைக்குட்டி என்றுஅழைக்கும் குழந்தை இவற்றிற்கிடையேகாணப்படும் வேறுபாடுகளானஉருவம்,நகருதல்,மரத்தில் ஏறுதல்,பஞ்சு போன்றஅடர்ந்த முடியுள்ள வால் ஆகியவற்றைக் கவனத்தில்கொள்கிறது. இதன் பயனாக பூனைக்குட்டி என்றஅறிதிறன் கட்டமைப்பு மாற்றம் பெறுவதுடன் ஒருபுதிய அறிதிறன் கட்டமைப்பும் ஏற்படுகிறது. பூனைக்குட்டி என்ற அறிதிறன் கட்டமைப்பு மாற்றம்பெற்று அணில் என்ற புதிய அறிதிறன் கட்டமைப்புஏற்படுகிறது.
இவ்வாறு நாம் ஏற்கனவே அறிந்திருப்பதன் அடிப்படையில்புதிய அனுபவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதன்வாயிலாகவும் புதிய அனுபவங்கள் ஏற்கனவே உள்ளஅறிதிறன் கட்டமைப்புக்கு பொருந்தாதபோது நம்முடையசிந்தனையை மாற்றியமைத்துக் கொள்வதன்வாயிலாகவும் அறிதிறன் வளர்ச்சி ஏற்படுகிறது என்பதுஃபியாஜேயின் கருத்தாகும்.
· அறிதிறன் வளர்ச்சி நிலைகள்
குழந்தையின் அறிதிறன் வளர்ச்சியில் ஃபியாஜேசில குறிப்பிடதக்க நிலைகளைக் குறிப்பிடுகிறார்.
v புலன் இயக்க நிலை - 0 - 2 வயது:-
0-2 வயது வரை குழந்தையின்உளவளர்ச்சியிள் முக்கிய பங்கு வகிப்பதுபுலக்காட்சிகளும், உடல் இயக்கச் செயல்பாடுகளுமேஆகும். பிறந்த குழந்தை 4 மாதம் வரை பார்த்தல்,சூப்புதல், பெறுதல் போன்ற செயல்களில்ஈடுபடுகிறது. பொருட்கள் அல்லதுநிகழ்வுகளுக்கான குறியீடுகளையோ அல்லதுசாயல்களையோ குழந்தை கற்றிருக்காது.குழந்தையின் கண்ணுக்குப் புலப்படாதபொருட்களை இல்லை என்றே நினைக்கும். எட்டுஅல்லது ஒன்பது மாதங்களில் பொருட்கள்நிலைத்தன்மை கொண்டவை என்றும் பொருட்கள்மறைத்து வைக்கப்பட்டாலும் அவைஉண்மையிலேயே இருக்கின்றன என்பதையும்குழந்தை அறிகிறது. அதன் அடிப்படையில்தான்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டாலும் குழந்தைஅவற்றை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில்இறங்குகிறது.
v செயலுக்கு முற்பட்ட நிலை - 2-7 வயது:-
இவ்வயது நிலையில் குழந்தை தன் மனதில்பொருட்களின் சாயல்களைப் பதிய வைக்கிறது.மொழியையும் ஓரளவு பயன்பாடுத்தத்துவங்குகிறது. உயிரற்ற பொருட்களை உயிருள்ளபொருட்களாகப் பாவித்து அவற்றுடன் பேசுவது,விளையாடுவது போன்ற செயல்களும்நிகழுகின்றன. சிந்தனை குழந்தையிடம்வளர்ந்திருந்தாலும் அதிலே நெகிழ்வுத் தன்மைஇருக்காது. குழந்தை இலகுவான, நீண்ட,மிருதுவான போன்ற கருத்துமைகளை புரிந்துகொள்ள முடிவதில்லை. ஒரு பொருளின் தோற்றம்மாறுபட்டுக் காணப்பட்டாலும் அதன் அடிப்படைப்பண்புகளில் மாற்றம் இருக்காது என்பதை புரிந்துகொள்வதில்லை.
A,B என்ற இரண்டு கண்ணாடிப்பாத்திரங்களில் 250 மில்லி கிராம் எண்ணெய்நிரப்பப்பட்டு உள்ளது.
A என்ற பாத்திரத்திலிருந்து எண்ணெயைசிந்தாமல் C பாத்திரத்திற்கு மாற்றியவுடன்குழந்தையிடம் A மற்றும் C என்ற பாத்திரங்களில்எதில் எண்ணையின் அளவு அதிகமாயிருக்கிறதுஎன்று கேட்டால் C என்று சொல்லும். ஏனெனில்குழந்தையின் சிந்தனையில் நெகிழ்ச்சித் தன்மைஇல்லை.
v பருப்பொருள்நிலை - 7- முதல் 11 வயது:-
இவ்வயது நிலையில் சிறு பிரச்சினைகளுக்குகுழந்தை தீர்வு காண்கிறது. தான் பார்க்கும்பொருட்களை வகைப்படுத்தவும் அவற்றிற்கிடையேஉள்ள தொடர்பை அறிந்துகொள்ளவும்குழந்தையால் முடிகிறது. பொருட்களின் பண்புகள்குறித்து ஒரே நேரத்தில் சிந்திக்க முடிகிறது.பாத்திரங்களின் அளவு வேறுபட்டாலும் அதில்நிரப்பப்பட்டு இருக்கும் பொருட்களின் அளவுமாறுவதில்லை என்பதை குழந்தையால் கூறமுடியும். புதிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளஒரு சில பொருட்களை அதன் முந்தைய நிலைக்குகொண்டு வர முடியும் என்பதையும் குழந்தைஉணர்ந்து கொள்கிறது. நீயும் உன் அக்காவும்மருத்துவமனைக்கு எதற்கு போனீர்கள்? என்றகேள்விக்கு மருத்துவரைப் பார்க்க என்பதற்குபதிலாக என் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லைஎன்பதால் மருத்துவமனைக்குச் சென்றோம் என்றபதிலை எதிர்பார்க்கலாம்.
v கருத்தியல் நிலை - 11-16 வயது:-
குழந்தை இவ்வயது நிலையில்குமரப்பருவத்தில் அடியெடுத்து வைக்கிறது.கருத்தியல் சிந்தனை இந்நிலையில் குழந்தையிடம்காணப்படுகின்றது. கொடுக்கப்பட்டுள்ளசூழ்நிலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் என்னநிகழ வாய்ப்புள்ளது என்பது பற்றியும் சிந்திக்கமுடியும். பிறர் நோக்கிலிருந்து கருத்துக்களையும்,பிரச்சினைகளையும் இவ்வயதினர் பார்க்க முடியும்.ஒரு
பிரச்சினைக்கான தீர்வுகளை கருதுகோள்களாகஇவர்கள் சிந்தித்து பார்க்கும் இயல்பினைபெற்றிருப்பர். அனுமானங்களை ஒவ்வொன்றாகச்சோதிக்கும் பார்க்கவும் இவர்களால் முடியும்.
ஆய்வுச்சிந்தனையைப் பயன்படுத்தி மனிதஉறவுகள், நெறிமுறைகள், அரசியல்போன்றவற்றின்மீது தங்களது கருத்துக்களைமுறைப்படுத்தி வெளிப்படுத்த இவர்களால் முடியும்.பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் அறிவியல்சிந்தனையும் இவ்வயது நிலையினரிடம்காணப்படுகின்றது.
· ஃபியாஜே கருத்தின் கல்வி தாக்கங்கள்
1) குழந்தையின் அறிவு வளர்ச்சி நிலையை நாம்மாற்றி அமைக்க இயலாது. ஒவ்வொரு நிலையிலும்குழந்தை குழந்தையின் பண்புகளை கவனமாகஆராய்ந்து அதற்கேற்ற வகையில் ஆசிரியர்செயல்பட வேண்டும்.
2) குழந்தையின் மன வளர்ச்சிக்கு ஏற்ப பள்ளிபாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.குழந்தையின் வயது நிலைக்கு ஏற்ப கற்றல்அனுபவங்கள் அமைத்து தரப்பட வேண்டும்.
3) குழந்தையின் வளர்ச்சி நிலையில் படிப்படியாகஏற்படும் மாற்றங்களை ஆசிரியர்களும்பெற்றோர்களும் அறிந்து கொண்டு அவர்களை வழிநடத்திட முடியும்.
4) குழந்தையின் கற்றல், அறிதிறன்,வளர்ச்சி மற்றும்சூழல் அனுபவங்களால் தீர்மானிக்கப்படுகிறது.சிறப்பான கற்றல் நடைபெற ஆசிரியர் அளிக்கும்அனுபவங்கள் குழந்தையால் உட்கிரகித்துக்கொள்ளும்படி அமைய வேண்டும்.
5) உண்மையான கற்றல் குழந்தையிடம் நடைபெறவேண்டும் எனில் பள்ளியிலும் மற்றும் வீட்டிலும்விரும்பத்தக்க சூழல்கள் அமைத்துத் தரப்படுதல்வேண்டும்.
6) 4 வயது வரை குழந்தைகளுக்கு அனுபவங்கள்பருப்பொருட்களால் அமைத்துத் தரப்படுதல்வேண்டும்.
7) உயர் நிலையில் கற்பித்தலுக்கு மொழியுடன்குறியீடுகளையும் பயன்படுத்த வேண்டும்.
8) சில பாடக்கருத்துக்கள் குழந்தை தானேகண்டறியும் முறையில் கற்பிக்கப்படலாம்.
9) குழந்தையின் அறிதிறன் வளர்ச்சியில்பாடச்செயல்திட்டத்துடன் கல்வி இணைமுறைச்செயல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.
10) குமரப்பருவ வயதினரிடத்தில்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திறமைகளைவளர்க்க வேண்டும். ஒரு கருத்தை அல்லதுபிரச்சினையை வேறொருவரின் நிலையிலிருந்துஆய்வு செய்திட அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
புரூனரின் அறிவுப் புல வளர்ச்சி
ஜெரோம் புரூனர் என்பவர் அமெரிக்க நாட்டின்உளவியல் அறிஞர்களுள் ஒருவர் ஆவார். இவர்குழந்தையின் அறிதிறன் வளர்ச்சியில் மூன்றுநிலைகளைக் குறிப்பிடுகிறார்.
1) செய்தறிதல் நிலை - 0-3 வயது வரை:-
இவ்வயது நிலையில் குழந்தை தன் சிந்தனைக்குமொழிச்சாயல்களையோ பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளது. குழந்தை பருப்பொருட்களைத்தொடுதல், நகர்த்துதல், எறிதல் அவற்றைவிளையாட்டிற்குப் பயன்படுத்துதல் போன்றசெயல்களில் ஈடுபடுகிறது. இவ்வாறு செயல்களில்ஈடுபடுவதால் உலக அனுபவம் குழந்தைக்குஏற்படுகிறது.
2) உருவக நிலை - 3-7 வயது வரை:-
இந்நிலையில் குழந்தை தன் அனுபவங்களைவிரிவாக்கிக் கொள்ள பருப்பொருட்களை மட்டும்சார்ந்திருப்பதில்லை. பருப் பொருட்கள் கண்முன்இல்லாத நிலையிலும் அவற்றை மனதில்உருவகப்படுத்தி சிந்தனையை வெளிப்படுத்தமுடிகிறது.
உதாரணமாக:- தாஜ்மஹால் என்ற உருவகம்மனதில் பதிந்திருக்கும் நிலையில் அது தொடர்பானதன் கருத்துகளை குழந்தையால் வெளிப்படுத்தஇயலுகிறது.
3) குறியீட்டு நிலை - 8-14 வயது வரை:-
மூன்றாம் நிலையில் குழந்தையிடம் போதுமானவளர்ச்சி ஏற்பட்டிருப்பதால், தன் சிந்தனைக்குமொழியையும் இதர குறியீடுகளையும்பயன்படுத்துகிறது, மொழி மற்றும்
குறியீடுகளைப் பயன்படுத்தி தன் எண்ணங்களைவெளியிடவும் குழந்தையால் முடிகிறது. சதுரத்தின்பரப்பளவு என்ன என்ற வினாவுக்குப் பதில் அளிக்கஒரு மாணவன் சதுரத்தைப் பார்ப்பதில்லை.சதுரத்தை மனதில் உருவகப் படுத்துவதில்லை.மாறாக, a x a= a2 என்ற குறியீடு மூலம் விடையளிக்கமுடிகிறது.
புரூனர் கருத்தின் கல்வி முக்கியத்துவம்
1 ஆரம்ப நிலையில் குழந்தைகளுக்கு செயல்முறைகள் மூலம் கற்றல் அனுபவங்களை அமைத்துத்தரவேண்டும். இவ்வகைக் கற்றல் அனுபவங்கள்குழந்தையின் அறிதிறனை துரிதப்படுத்தும்.
2 குழந்தைகள் பார்த்ததை நினைவில்நிலைநிறுத்துவதற்கு ஏற்ப கற்பித்தல் துணைக்கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
3 கற்றல் அனுபவங்களை குறியீடுகளாகச்சுருக்கியளித்தல் உயர்நிலைப் பள்ளிமாணவர்களுக்குச் சிறந்த பயனை அளிக்கும்.
Comments
Post a Comment