உலக பட்டினிதினம்.
இன்றுமே28ஆம்
உலக பட்டினிதினம். ‘தனிஒருவனுக்குஉணவில்லை எனில் ஜகத்தினைஅழித்திடுவோம்’ என்று பாடினான்பாரதி. பசி, உணவின் முக்கியத்தைஉணர்த்தவே இத்தனை ஆவேசத்துடன்அவன் கவிதை வடித்தான். பசி ஒருபெரும் கொடுமை, ஒருவரை உயிரோடுகொல்லும் மரணத்திற்குச் சமம். எய்ட்ஸ், எபோலா போன்ற உயிர்கொல்லிநோய்களால் ஆண்டுதோறும் இறப்போர்எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால்ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நாஅறிக்கை வெளியிட்டுள்ளது. பட்டினிகுறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின்உணவு மற்றும் வேளான்அமைப்பு (F.A.O) கடைசியாக 2013-ல் வெளியிட்டபுள்ளிவிவரங்கள்.
உலகில் 81 கோடி மக்கள் இன்னும்பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடிமக்கள் அதாவது 98 சதவீதம்வளர்ந்துவரும் நாடுகளில்உள்ளனர்.உலகில் 8 பேரில் ஒருவர்பசியோடு ஓருவேளை உணவுக்குகையேந்தி வாழ்கிறார்.ஆசியபசிபிக்பிராந்தியத்தில் 52 கோடி மக்கள்,ஆப்பிரிக்காவில் 3 கோடி மக்கள், லத்தீன்அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில்4 கோடி மக்கள், வளர்ச்சியடைந்தநாடுகளில் 1.5 கோடி மக்கள் பட்டினியில்வாழ்கிறார்கள். உலகில் ஊட்டச்சத்துக்குறைவால் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள்ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம்பட்டினி அதிகரித்துள்ளதாக உலகபட்டினி குறியீட்டெண் பட்டியல் (Global hunger index list) தெரிவிக்கிறது.
பட்டினிச் சவாலை அதிகமாக ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்ககண்டங்களில் உள்ள நாடுகளில் அதிகஅளவில் எதிர்கொண்டுவருகின்றனர்.
உலக நிலைமைகள் இவ்வாறுஇருக்கையில் இலங்கையின் நிலைமைகுறித்து தற்போது பார்ப்போம். இலங்கையை பொறுத்தவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படிநாட்டின் வறுமை வீதமானது 6.7 ஆகஅமைந்துள்ளது. கடந்த 20 வருடங்களைஎடுத்துப்பார்க்கும்போது வறுமை நிலைகுறைவடைந்து வருகின்றமையை நாம்அவதானிக்கின்றோம். குறிப்பாக கடந்த2002 ஆம் ஆண்டில் 22.7 வீதமாக வறுமைவீதம் 2006 ஆம் ஆண்டில் 15.2 வீதமாகவும்2009 ஆம் ஆண்டில் 8.9 வீதமாகவும்குறைவடைந்து வந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டின் தரவுகளின் படிமுல்லைத்தீவு மாவட்டமே அதிகளவில்வறுமைக்குரிய மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் 28.8 வீதம் வறுமைகாணப்படுகின்றது. அடுத்ததாகமொனராகலை மாவட்டம் உள்ளது. இந்தமாவட்டத்தில் 20.8 வீதமாக வறுமை வீதம்காணப்படுகின்றது.
Comments
Post a Comment