உலக பட்டினிதினம்.
இன்று மே 28 ஆம் உலக பட்டினி தினம் . ‘ தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் ’ என்று பாடினான் பாரதி . பசி , உணவின் முக்கியத்தை உணர்த்தவே இத்தனை ஆவேசத்துடன் அவன் கவிதை வடித்தான் . பசி ஒரு பெரு ம் கொடுமை , ஒருவரை உயிரோடு கொல்லும் மரணத்திற்குச் சமம் . எய்ட்ஸ் , எபோலா போன்ற உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும் , பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ . நா அறிக்கை வெளியிட்டுள்ளது . பட்டினி குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளான்அமைப்பு (F.A.O) கடைசியாக 2013- ல் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் . உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர் . 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர் . உலகில் 8 பேரில் ஒருவர் பசியோடு ஓருவேளை உணவுக்கு கையேந்தி வாழ்கிறார் . ஆசியபசிபிக் பிராந்தியத்தில் 52 கோடி மக்கள் , ஆப்பிரிக்காவில் 3 கோடி மக்கள் , லத்தீன் அமெரிக்கா மற்றும் கர