தற்கால இந்தியா சமுதாயமும் கல்வியும் முக்கியமான வினா விடைகள்-2020
B.Ed I year Paper Presentation Contemporary India and Education-2020
சமூக வேற்றுமையைப் புரிந்து கொள்வதில் கல்வியின் பங்கு:
குறிப்புச் சட்டம்
* முன்னுரை
* சமூக வேற்றுமையின் பொருள்
* சமூக வேற்றுமையின் வரையறை
* சமூக வேற்றுமையைப் புரிந்து கொள்வதில் கல்வியின் பங்கு
* சமூக வேற்றுமையில் இந்தியாவில் கல்வி
* சமூக வேற்றுமை முக்கியத்துவம் அரசினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடு
* முடிவுரை
முன்னுரை:-
சமூக வேற்றுமையைப் புரிந்து கொள்ளுவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக வேற்றுமையில் படிநிலையில் கல்வி முக்கியமான ஒன்று ஆகும். இப்பண்புகளுடன் வறுமை, கல்வியறிவின்மையை போக்க சமூக வேற்றுமையில் கல்வி பெரிதும் உதவுகிறது.
சமூக வேற்றுமையின் பொருள்:-
வேற்றுமை என்பதன் கருத்து சமூகத்தின் பல்வேறு தன்மைகளை ஏற்றுக் கொள்ளுதலையும், அதற்கு மரியாதை அளித்தல் தன்மையையும் உள்ளடக்கியத்தைக் குறிக்கிறது.
இதனுடன் இனம், வாழ்க்கை முறை, பால்வேறுபாடு, சமூக பொருளாதார நிலை, வயது, உடல்திறன், மத நம்பிக்கை, அரசியல் நம்பிக்கை மற்றும் பிற தத்துவக் கருத்துக்கள் வேற்றுமை என்ற கருத்தில் உள்ளது.
இதுவே சமூக வேற்றுமை எனப்படுகிறது.
சமூக வேற்றுமையின் வரையறை:-
"சிறுபான்மையினரையும், மாறுபட்ட கலாச்சார பின்புலம், இனங்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ள, சமூகத்தில் காணப்படும் பல்வேறு வகையான வேறுபாடுகள் (அ) ஒத்த தன்மைக்கு மாறானவைகளே, சமூக வேற்றுமை ஆகும்" என்று பார்க்கர் (2003) என்பார் கூறுகிறார்.
"மக்களின் வேலை (அ) உற்பத்தி வழிமுறை உறவுகளால், சமூக வேற்றுமை நிர்ணயிக்கப்படுகிறது" என்பது கார்ல் மார்க்ஸின் கருத்து ஆகும்.
இந்தப் பல்வேறு பாதிப்புகள் போற்றப்படும்போது சமூக வேற்றுமையை பிரதிபலிக்கின்றது என்று சமூகவியலார் கருதுகின்றனர்.
சமூக வேற்றுமையைப் புரிந்து கொள்வதில் கல்வியின் பங்கு:-
# கல்வி நிலையங்களில் சாதி, மத வேறுபாடின்றிப் பழகவும் பிரிவினரிடையே நல்லிணக்கத்தை வளர்க்கவும், பாட இணைச் செயல்களில் பங்கேற்க ஊக்குவித்தல்.
# பள்ளிக் கலைத்திட்டத்தில் நாட்டு விடுதலை போராட்ட வரலாறு, முக்கியத் தலைவர்களின் தியாகங்கள், இந்திய அரசியல் சாசனக் கருத்துக்கள் போன்றவை அவசியம் இடம் பெறச் செய்தால் சமூக வேற்றுமை மூலம் தேசிய ஒற்றுமைப் பலப்படுத்தப்படுகிறது.
# ஏற்றுமதி, சேமிப்பு மற்றும் முதலீடு போன்ற பாடப் பகுதிகளைக் கற்றலினால், பொருள் சார்ந்த பண்பாட்டுக் கூற்றில் வேற்றுமையைக் கண்டறிவதற்குக் கல்வி உதவுகிறது.
# பொருள்சாரப் பண்பாட்டுக் கூறான நம்பிக்கைகள், மனப்பான்மைகள், பாதிப்புகள் போன்றவற்றில் காணப்படும் வேற்றுமைகளை அறிய, மொழிப்பாடத்தில் கற்கும் செய்யும் பகுதியே போதுமானதாக உள்ளது.
# இது நமது மாணவ சமுதாயத்தினர் தமக்குள்ள வேற்றுமைகளை உணரவும், பிறரிடம் (அ) சமூகத்தில் காணப்படும் வேற்றுமைகளுக்கு மதிப்பளிக்கவும் கற்றுத் தருகிறது.
# காந்தியடிகளின் ஆதாரக் கல்வி முறை, மாணவர்களின் தனியாள் வேற்றுமை மூலம் சமூகம் சார்ந்த தனித்துவத்திற்கு வித்திட்டது. பாரதியாரின் பெண்கல்விக்கான குரல் பெண்ணினத்திற்குத் தனித்துவம் தர ஆரம்பித்தது.
# புவியியல் பாடம் நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியின் இயற்கை வளங்களையும், அவற்றின் தனித் தன்மைகளையும் அறியச் செய்து, அதற்கேற்ப வாழ்வியல் முறையினை அமைத்துக் கொள்ள உதவுகிறது.
# அறிவியல் பாடம் மாணவரிடையே அறிவியல் மனப்பான்மை, ஆராய்ந்தறியும் போக்கு ஆகியவற்றை வளர்த்து சமூக வேற்றுமை குறித்த எண்ணங்களை தவிர்க்கச் செய்கிறது.
# தேசியக் கல்விக் கொள்கை மாணவர்கள் பல மொழிகளைக் கற்க ஊக்குவிக்கிறது.
# பல மாநிலப் பண்டிகைகள், தேசிய விழாக்கள் போன்ற கொண்டாட்டங்களில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்தல்.
# பாடப்புறச் செயல்களாக ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்குச் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லல், தேசிய கலை விழாக்களிலும், அறிவியல் கண்காட்சிகளிலும் மாணவர்களைப் பங்கு பெறச் செய்தல்.
# தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணிக்கழகம் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடச் செய்தல்.
# பல சமயங்களின் பண்டிகைகைக் கொண்டாடச் செய்து, அச்சமயங்களில் விழாவின் சிறப்புகள், அவை கொண்டாடுவதன் நோக்கம் ஆகியவற்றைப் பற்றி மாணவர்களைக் கலந்துரையாடச் செய்தல்.
# இயற்கைக் கொடுமைகளின் போது உதவி நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தல்.
சமூக வேற்றுமையில் இந்தியாவில் கல்வி :-
இந்தியாவில் தமிழ்நாட்டில் கல்விச் சமவாய்ப்புகள் சிறப்பான முறையில் அமைந்திட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை.
1. சீரான கல்வித்தரம் :-
தமிழகமெங்கும் சீரான கல்வித்தரம் நிலவ ஒவ்வோர் ஊரிலும் அரசுப் பள்ளிகளும், மாவட்டந்தோறும் குறைந்தது ஓர் அரசு கலைக்கல்லூரி (ம ) பொறியியற் கல்லூரி திறக்கப்பட்டுள்ளன. மேலும் மேனிலைப் பள்ளிக் கல்வி வரை ஒவ்வொரு வகுப்பிற்க்கும் உரிய அனைத்துப் பாட புத்தகங்களை மலிவு விலையில் வெளியிடுகின்றனர்.
2. பெண் கல்விக்கு ஊக்கம் :-
பெண் கல்வியை ஊக்குவிக்க பெண்களுக்கு தனியே அரசு உயர்நிலைப் பள்ளிகள், திறக்கப்பட வேண்டும்.
எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு ரூ.5000 அன்பளிப்பாகத் தருகிறது.
மகளிருக்கான தனியாக ஒரு பல்கலைக்கழகம் கொடைக்கானலில் "அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம்" என்ற பெயரில் இயங்கிவருகிறது.
3. உடல் ஊனமுற்றோர்க்கு வாய்பளித்தல் :-
உடல் ஊனமுற்றோர்க்கு சிறப்பான பள்ளிகள் மாவட்டந்தோறும் திறக்கப்பட்டுள்ளன. உடல் ஊனமுற்றோர்க்கு கல்வியிலும், அரசு வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கல்வி நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
4. இலவச பாடப்புத்தகங்கள் வழங்கல்:-
அரசுப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்புவரை இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
சமூக வேற்றுமையை அரசினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடு:-
கலாச்சார வேற்றுமை மீதான யூனெஸ்கோவின் தீர்மானத்தின் மூலம், சமூக வேற்றுமை முக்கியத்துவம் பெறப்படுவதை அரசால் மேற்கொள்ளப்படும் பின்வரும் செயல்பாடுகளின் மூலம் அறியலாம்.
1. தேசிய மொழிகளுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் அளித்தல்
2. கல்வி நிலையங்களில் விருப்பப்படும் மொழிகளைக் கற்றுக் கொள்ள வசதி செய்து தரல்.
3. கலைத்திட்ட வடிவமைப்பிலும், ஆசிரியர் கல்வியிலும், சமூக வேற்றுமை மீதான நல்மதிப்புகளைக் கல்வி வழியே வளர்க்க வேண்டும்.
4. பல்வேறு கலாச்சாரங்கள் குறித்த அறிவினை, மரபு வழிக்கல்வி செயல்முறை வழியே இணைக்க வேண்டும்.
5. மின்னியல் கல்வி முறையை, கல்விச் சேவையில் உட்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
6. மொழி வேற்றுமையைக் கண்ணுக்குப் புலனான இணையதள சேவையில் மேம்படுத்தி, மொழியின் தனித்துவத்தைப் பன்னாட்டளவில் தெரியப்படுத்த வகை செய்தல்.
7. வளர்ந்து வரும் நாடுகளின் கல்வி, கலாச்சார, அறிவியல் சாதனங்களையும், பண்பாட்டுப் பொருட்களையும், தகவல் தொழில்நுட்ப மின்னியல் வளங்களின் வாயிலாக அரியச் செய்தல்.
8. பல்வகை ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பங்களில் காணொலிக் காட்சி, ஸ்கைப், வாட்ஸ்-ஆப், முகநூல், டுவிட்டர் போன்றவற்றின் மூலம் சமூக வேற்றுமைகளை அறியச் செய்து அதற்கு மதிப்பளித்து ஒற்றுமை உணர்வோடு வாழும் மனப்பான்மையை வளர்த்தல்.
முடிவுரை:-
இந்த வகையில் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களும் கற்றல் - கற்பித்தலை நிகழ்த்தினால், வருங்கால சமுதாயம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுடன், தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளித்து வெற்றியும் பெறுவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சாதி, மதம் வேறுபாடின்றி சமூக வேற்றுமையைப் புரிந்து கொள்வதில் கல்வியின் பங்கு பெரிதும் துணை புரிகின்றது
Subscribe
Environmental important questions please give
ReplyDelete