18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு. பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு 18-ந்தேதி ஆய்வு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் 19-ந் தேதி பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் பள்ளிகளை திறக்க விருப்பம் : பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அனைத்து மாணவர்களும் முகக்கவசம் கட்டாயம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், குடிநீர், உணவு வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கைகுலுக்குதல், தொட்டு பேசுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் 25 பேர் வீதம் குழுவாக பிரித்து பாடம் நடத்தவும், ஆய்வகத்திலும் கூட்டத்தை தவிர்க்கவ...